500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருப்பத்தூரில் 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-05 19:10 GMT

திருப்பத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேசன் உத்தரவின்பேரில் ஆணையாளர் திருநாவுக்கரசு மற்றும் நகராட்சி பணியாளர்கள் தர்மராஜகோவில் தெரு, ஜின்னா ரோடு ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள சில கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்