500 ரூபாய் கள்ளநோட்டுகளை கொடுத்து பெட்ரோல் நிரப்பிச் சென்ற மர்மநபர்கள்

நெல்லை அருகே 500 ரூபாய் கள்ளநோட்டுகளை கொடுத்து மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-17 20:11 GMT

நெல்லை அருகே 500 ரூபாய் கள்ளநோட்டுகளை கொடுத்து மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பிச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெட்ரோல் பங்க்

நெல்லை அடுத்த கிருஷ்ணாபுரம் ஆச்சிமடம் அருகே ஒரு பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கு நொச்சிகுளம் மகாராஜநகர் கீழத்தெருவை சேர்ந்த வேல்ராஜ் (வயது 32) என்பவர் வேலைபார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் வேல்ராஜ் பணியில் இருந்த போது 2 மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த நபர் 2 ரூ.500 நோட்டுகளை கொடுத்து ரூ.600-க்கு பெட்ரோல் போடக்கூறினார். அதன்படி வேல்ராஜ் பெட்ரோல் போட்டுவிட்டு மீதி ரூ.400-யை திருப்பி கொடுத்துள்ளார்.

கள்ளநோட்டு

இரவு பணிகள் முடிந்த பின்னர் ரூபாய் நோட்டுகளை எண்ணிய போது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கொடுத்த பணம் கள்ள ரூபாய் நோட்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து வேல்ராஜ் சிவந்திபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பெட்ரோல் பங்கில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளில் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. மேலும் போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனா்.

Tags:    

மேலும் செய்திகள்