நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 50 காசுகள் அதிகரிப்பு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 50 காசுகள் அதிகரித்துள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் லில் நடந்தமுட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 50 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 470 காசுகளாக ( ரூ. 4.70 ) நிர்ணயம் செய்யப்பட்டது.
தமிழகத்திலும், வடமாநிலங்களிலும் பண்டிகைகள் முடிந்து முட்டை நுகர்வு அதிகரித்து இருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாகவும் முட்டை விலை அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.