லாரி மீது பஸ் மோதியதில் 50 அய்யப்ப பக்தர்கள் காயம்

லாரி மீது பஸ் மோதியதில் 50 அய்யப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2022-12-15 20:51 GMT

நாமக்கல்,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த சுமார் 50 அய்யப்ப பக்தர்கள் ஒரு சுற்றுலா பஸ்சில் சபரிமலைக்கு புறப்பட்டனர். இந்த பஸ் நேற்று அதிகாலை சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தியேட்டர் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது முன்னால் சென்ற லாரியை பஸ் டிரைவர் முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சமயம் லாரி டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் பஸ் லாரியின் பின்பகுதியில் மோதியதுடன், நிற்காமல் வடபுறம் சர்வீஸ் சாலையை கடந்து அங்குள்ள டீக்கடை, பேக்கரி கடையின் சுவற்றில் மோதி நின்றது.

முதலுதவி

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சுமார் 50 அய்யப்ப பக்தர்கள் காயம் அடைந்தனர். மேலும் பஸ், லாரி டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற அகில பாரத அய்யப்பா சேவா சங்க நிர்வாகிகள் காயம் அடைந்த அய்யப்ப பக்தர்களை மீட்டு அங்குள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.

மேலும் பஸ், லாரி டிரைவர்கள் சிகிச்சைக்காக குமாரபாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்