5 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கொலை வழக்கில் தொடர்புடைய 5 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கில் தொடர்புடைய 5 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கு
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வண்டிமலைச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலகுமார் என்ற பண்ணையார்குமார் (வயது 42). இவரை வீரவநல்லூர் வீற்றிருந்தான்குளம் அருகே கடந்த மாதம் 9-ந் தேதி மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரவநல்லூர் கம்பளத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக் (22), சாஸ்தா குமார் மகன் வசந்த் (23), பரதன் மகன் கொம்பையா (23), மாலையப்பன் மகன் கண்ணன் (21), இந்திரா நகரை சேர்ந்த ராமையா மகன் முத்துராஜ் (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.
குண்டர் சட்டம்
இந்த நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று, கார்த்திக், வசந்த், கொம்பையா, கண்ணன், முத்துராஜ் ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை வீரவநல்லூர் போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர்.
இதன்மூலம் நெல்லை மாவட்டத்தில் இதுவரை 102 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.