வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வியாபாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது
பாளையங்கோட்டை:
நெல்லை பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் முருகன் (வயது 52). அப்பள வியாபாரம் செய்து வந்தார். இவர், கடந்த 2020-ம் ஆண்டு 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அன்புச்செல்வி, குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்.