முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை

கல்லிடைக்குறிச்சியில் முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-08-30 19:47 GMT

அம்பை:

கல்லிடைக்குறிச்சி பட்டாரியார் தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் பீர் முகமது (வயது 48). இவருக்கும், கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அப்துல் மஜீத் மகன் அஸரப் என்பவருக்கும் ஜமாத் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு கல்லிடைக்குறிச்சி 6-ம் நம்பர் ரோட்டில் நின்று கொண்டிருந்த பீர் முகமதுவை அஸரப் அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசில் பீர்முகமது கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த வழக்கு அம்பை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி செந்தில்குமார் விசாரித்து பீர்முகமதை அரிவாளால் வெட்டிய அஸரப்பிற்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் திருமலை குமார் ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்