விவசாயிக்கு 5 ஆண்டு சிறை

கொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டு சிறை

Update: 2023-06-07 18:45 GMT

விழுப்புரம்

செஞ்சியை அடுத்த அனந்தபுரம் அருகே உள்ள துத்திப்பட்டு என்ற ஊரை சேர்ந்தவர் துரைராஜ்(வயது 63). இவர் கடந்த 20-9-2015-ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த விவசாயி ராஜீவ்காந்தி(40) என்பவரிடம் நிலம் வாங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் முன் பணம் செலுத்தி விட்டு 3 மாதம் ஒப்பந்தம் செய்திருந்தார்.

இந்த நிலையில் முழு பணத்தையும் திருப்பி செலுத்த முடியாததால் நிலத்தை வேறு யாருக்காவது விற்பனை செய்யுமாறு ராஜீவ்காந்தியிடம் கூறினார். ஆனால் இதை ஏற்க மறுத்த அவர் நீ தான் இந்த நிலத்தை வாங்க வேண்டும் என்று கூறி தகராறு செய்து துரைராஜை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இது குறித்து துரைராஜ் கொடுத்த புகாரின் பேரில் ராஜீவ்காந்தியின் மீது அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு செஞ்சி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜீவ்காந்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் சார்பு நீதிமன்ற நீதிபதி நளினகுமார் தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்