சூளகிரியில் ஜல்லிக்கற்கள் கடத்தல்; 5 லாரிகள் பறிமுதல்

Update: 2023-06-14 18:45 GMT

சூளகிரி

ஓசூர் சிறப்பு தாசில்தார் பெருமாள், சூளகிரி மண்டல துணை தாசில்தார் அம்மு மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணகிரி-சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி, ஓசூர்-ராயக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை மற்றும் பேரண்டப்பள்ளி பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 5 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் மொத்தம் 20 யூனிட் ஜல்லிக்கற்கள் கடத்தி வருவது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி, ஓசூர் டவுன், அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 லாரிகளையும், 20 யூனிட் ஜல்லிக்கற்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்