5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2023-01-09 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக 5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

மீன்பிடிக்க செல்லவில்லை

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக காணப்படுவதால் நேற்று முன்தினம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இ்ந்த நிலையில் நேற்றும் கடல் சீற்றமாக காணப்பட்டால் 5 ஆயிரம் மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதன்காரணமாக மீனவர்கள் தங்களது பைபர் படகு மற்றும் மீன்பிடி வலைகளை கடற்கரையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி கிடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்