பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு

பாய்லர் ஆலை ஊழியர் வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு போனது.

Update: 2023-03-27 19:42 GMT

திருவெறும்பூரை அடுத்த துவாக்குடி சுங்க சாவடி அருகே உள்ள அருணகிரிநாதர் நகரை சேர்ந்தவர் அருள்நாதன் (வயது 62). இவர் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று விட்டார். இவரது மனைவி சுமதி (55). பாய்லர் ஆலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் அருள்நாதனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் திருச்சியில் உள்ள தனியார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடன் சுமதியும் சென்று இருந்தார். இதற்கிடையில் நேற்று காலையில் மருத்துவமனையில் இருந்து சுமதி வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, 5 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்