ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

ராமநாதபுரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-02-18 18:45 GMT

ராமநாதபுரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

5 பவுன் நகை பறிப்பு

ராமநாதபுரம் அருகே உள்ள தொருவளுர் காரேந்தல் பகுதியை சேர்ந்தவர் பால்சாமி மனைவி புஷ்பம் (வயது 68). இவர் தனது மகன் ராமு என்பவருக்கு தேவிபட்டினம் நாரணமங்களத்தில் பெண் பார்ப்பதற்காக, காரேந்தல் கிராமத்தில் இருந்து தனது மகன் ராமு மற்றும் மகள் முருகேஸ்வரியுடன் ராமநாதபுரம் வந்தார். அரண்மனை பகுதியில் இருந்து டவுன்பஸ்சில் ஏறி சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது.

அப்போது பஸ்சில் புஷ்பம் அருகில் அடையாளம் தெரியாத சிவப்பு சேலை கட்டிய ஒரு பெண் ஒருவர் புஷ்பத்தை இடித்துகொண்டு நின்றபடி வந்ததுடன் அருகில் இருந்த மற்றொரு பெண்ணுடன் பேசியபடி வந்துள்ளார். கேணிக்கரை பஸ்நிறுத்தம் பகுதியில் இறங்கிய போது அந்த பெண்கள் இருவரும் இறங்கி சென்றுவிட்டனர். அதன்பின்னர் இறங்கிய புஷ்பம் கழுத்தில் பார்த்தபோது அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

2 பேருக்கு வலைவீச்சு

பஸ்சில் கூட்ட நெரிசலில் 2 பெண்களும் சங்கிலியை பறித்து கொண்டு சென்று விட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதுகுறித்து புஷ்பம் ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து பஸ்சில் திருடி மாயமான 2 பெண்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்