வனத்துறை அதிகாரிகள் எனக்கூறி பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

வனத்துறை அதிகாரிகள் எனக்கூறி பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-09-16 18:45 GMT

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அப்புக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 40). இவரது கணவர் குமரேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஜோதி தனது மகன் மற்றும் மகள் ஆகியோருடன் வசித்து வருகின்றார்‌. இவருக்கு சொந்தமாக 15-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளது. மேலும் இவர் விவசாயம் செய்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று பகல் 12 மணிக்கு அங்குள்ள மலாகுட்டை பகுதிக்கு மாடுகளை மேய்ப்பதற்காக ஓட்டிச் சென்றார்.

அப்போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் ஜோதியிடம் சென்று நாங்கள் வனத்துறை அதிகாரிகள் என்றும், இந்தப் பகுதியில் மரம் வெட்டுகிறார்களா என்பதை பார்க்க வந்துள்ளதாகவும் கூறி உள்ளனர். அப்போது அவர்கள் திடீரென ஜோதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஜோதி அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்