ஜோலார்பேட்டை அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

ஜோலார்பேட்டை அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-06-08 17:49 GMT

ஜோலார்பேட்டை, ஜூன்.9-

ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விக்னேஷ் (வயது 28), கடந்த 6-ந் தேதி இரவு தனது வீட்டின் முன் கதவை தாழ்ப்பாள் போடாமல் அடைத்து விட்டு டி.வி. பார்த்துக்கொண்டே தூங்கி விட்டார்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது டிரெஸ்ஸிங் டேபிளில் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விக்னேஷ் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி.கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்