எருது விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம்

எருது விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-27 17:56 GMT

ஜோலார்பேட்டை

எருது விடும் விழாவில் காளைகள் முட்டியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சியில் எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில் ஓசூர், கிருஷ்ணகிரி, பர்கூர், திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, மிட்டூர், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 180 காளைகள் போட்டியில் பங்கேற்றன.

விழாவிற்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கிருபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன், முன்னாள் தலைவர் கண்ணதாசன், ஊராட்சி மன்ற தலைவர் மாதவன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய கவுன்சிலர் ஆ.கலா ஆஞ்சி முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க.செயலாளரான க.தேவராஜி எம்.எல்.ஏ., முன்னாள் வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் எருது விடும் விழாவை தனித்தனியாக தொடங்கி வைத்தனர்.

குறைந்த நேரத்தில் இலக்கை நோக்கி வேகமாக ஓடிய காளைகளுக்கு முதல் பரிசாக ஒரு லட்சமும், இரண்டாவது பரிசாக 77 ஆயிரத்து 777, மூன்றாவது பரிசாக 66 ஆயிரத்து 666 என மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது.

மந்தையில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற ஐந்து பேருக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விழாவில் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதிஷ்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

எருதுகள் ஓடும் மந்தையில் அதிகமான மாடுபிடி இளைஞர்கள் திரண்டு நின்றதால் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி பாதுகாப்பை கருதி எருது விடுவதை நிறுத்தினார். பின்னர் போலீசாரால் மந்தையில் நின்ற இளைஞர்களை வெளியேற்றி பின்னர் 15 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் எருது விடும் திருவிழா தொடங்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்