மதுவிற்ற 5 பேர் கைது

செங்கோட்டை அருகே மதுவிற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-10-02 21:04 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே கட்டளைகுடியிருப்பு கிராமத்தில் டாஸ்மாக் கடை அருகே திருமலை என்பவர் பாரில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் தலைமையில் புளியரை சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சய் காந்தி, தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு பாரில் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த அப்பகுதியைச்சேர்ந்த தங்கராசு (வயது 68), மணிராஜ் (40), ஆறுமுகம் (59), செல்வின் (51), செந்தில்குமார் (37) ஆகிய 5 பேரை கைது செய்தனர். 691 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுசம்பந்தமாக மகாதேவன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்