மது விற்ற 5 பேர் கைது

மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-02 17:40 GMT

குளித்தலை அருகே உள்ள வலையப்பட்டி, நடுப்பட்டிபாலம், மையிலாடி, மேலமணத்தட்டை, ராஜேந்திரம் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த பகுதிகளுக்கு ரோந்து சென்ற போலீசார் அங்கு மது விற்ற சீக்கம்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 52), நடுப்பட்டி பாலம் பகுதியை சேர்ந்த கண்ணன் (59), வடக்குபுதூரை சேர்ந்த வெற்றிவேல் (45), மேலமணத்தட்டையை சேர்ந்த சரவணன் (45), ராஜேந்திரத்தை சேர்ந்த பரமேஸ்வரி (63) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மொத்தம் 50-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்