பணம் வைத்து தாயம் விளையாடிய 5 பேர் கைது
பணம் வைத்து தாயம் விளையாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனா்.
டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் நரசாபுரம் பள்ளம் அருகே பங்களாப்புதுார் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சிலர் தாயம் ஆடிக்கொண்டு இருந்தனர். உடனே போலீசார் அனைவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கே.என்.பாளையம் நரசாபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்கிற கட்ட பெருமாள், குமார், மோகன்குமார், சந்திரன், பெரியசாமி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.