பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
தியாகதுருகத்தில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் இருந்தனர். அப்போது புக்குளம் டாஸ்மாக் கடையின் பின்புறம் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த தியாகதுருகம் உதயமாம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ்(வயது 56), சேகர்(45) வெங்கடேஸ்வராநகர் சசிகுமார் (41), காந்திநகர் பாண்டியன் மகன் மகேந்திரன்(35), தியாகதுருகம் கமல்கான்(50) ஆகிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.100-ஐ பறிமுதல் செய்தனர்.