மது விற்ற பெண் உள்பட 5 பேர் கைது

கூடலூர், போடியில் மது விற்ற பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-08-11 14:24 GMT

கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைப்பாண்டியன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பாம்பு நகர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி இந்திராணி (வயது 55) என்பவர் மது பாட்டில்களை மொத்தமாக விலைக்கு வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் போடி நகரில் மது விற்ற போடி நந்தவன தெருவை சேர்ந்த பிச்சை மணி (49), சர்ச் தெருவை சேர்ந்த செல்லத் துரை (41), சந்தைபேட்டை தெருவை சேர்ந்த கணேசன் (44), கீழ்த் தெருவை சேர்ந்த தங்கபாண்டி (48) ஆகிய 4 பேரை போடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 57 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்