வெவ்வேறு சம்பவங்களில் எலக்ட்ரீசியன் உள்பட 5 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் எலக்ட்ரீசியன் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-01-24 19:23 GMT

வெவ்வேறு சம்பவங்களில் எலக்ட்ரீசியன் உள்பட 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

எலக்ட்ரீசியன்

சிறுகனூர் அருகே உள்ள பெரகம்பியைச் சேர்ந்தவர் தினேஷ் (வயது48). எலக்ட்ரீசியனான இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இதை இவரது மனைவி கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் தினேஷ் குடிபழக்கத்தை கைவிடவில்லை.

சம்பவத்தன்று இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதல் மனம் உடைந்த தினேஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைகண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் தற்கொலை

திருச்சி, காஜாமலை, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் விக்னேஷ் (26). வயிற்று வலியால் அவதி அடைந்து வந்த இவர் நேற்று வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் தற்கொலை

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் தினேஷ் (25). டிரைவரான இவர் முல்லை வாசலைசேர்ந்த ராணி மகள் கீர்த்தனா (21) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் தினேஷ் வேலைக்கு செல்லும் நேரங்களில் கீர்த்தனா பக்கத்து தெருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாய் வீட்டில் இருந்த கீர்த்தனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியுடன் தகராறு

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனியை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் ராஜசேகர் (36). இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்தபோது, கடந்த 6 மாதத்துக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மனைவியிடம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நவல்பட்டு வந்த ராஜசேகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

வளநாடு சடையாண்டி தோப்பு முகமதியாபுரத்தைச் சேர்ந்தவர் அழகிரி (35). திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் இவர் நேற்று ஊத்துக்குளியில் உள்ள மாமனார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்