கயத்தாறு அருகே பூ வியாபாரி கொலையில் 5 பேர் கைது

கயத்தாறு அருகே பூ வியாபாரி கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பார் உரிமையாளர் உள்பட இரண்டு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2022-10-06 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே பூ வியாபாரியை கொலை ெசய்த வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் டாஸ்மாக் பார் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

பூ வியாபாரி கொலை

கயத்தாறு அருகே உள்ள மஞ்சநம்பிகிணறு கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் அழகுதுரை (வயது 36). பூ வியாபாரி. இவர் பூந்தோட்டம் வைத்து, அதனை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செட்டிகுறிச்சி டாஸ்மாக் பாரில் மதுக்குடிக்கும் இடத்தில் உறவினர் ஒருவருடன் அவர் தகராறு செய்துள்ளார். இதை பார் உரிமையாளர் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர். இதில் பார்உரிமையாளர் தரப்பினருக்கும், அவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

வெட்டிக்கொலை

பின்னர் அழகுதுரை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு அழகுதுரை வீட்டிற்கு சென்ற 7 பேர் கும்பல் தகராறு செய்துள்ளனர். பின்னர் அவரை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து சென்ற அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் உத்தரவின் பேரில், கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

5பேர் சிக்கினர்

இதில் அழகுதுரை கொலை வழக்கில் மாரியப்பன் என்ற ஸ்டாலின் (31), கனகராஜ் (33),பட்டு ராஜா(29), முருகன் என்ற பாலமுருகன்(29), பாண்டி என்ற பாலபாண்டி(57) ஆகிய 5 பேரை கயத்தாறு போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், டாஸ்மாக் பாரில் தகராறு செய்த அழகுதுரையின் வீட்டிற்கு சென்று அவரை வெளியே வரவழைத்து பேசினோம். அப்போது அவருக்கும், எங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் அவரை அரிவாளால் வெட்டி ெகாலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டோம், என தெரிவித்துள்ளனர்.

பார் உரிமையாளருக்கு வலைவீச்சு

மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள நாகராஜ், பார் உரிமையாளர் மாடசாமி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்