ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-17 16:56 GMT

 நத்தம் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நத்தம் பஸ்நிலையம், அவுட்டர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த தனசேகர் (வயது 23), ராஜேஷ் (34), கூவன் (33), பிரகாஷ் (19), மணி (42) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.23 ஆயிரம், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்