சீட்டு விளையாடிய 5 பேர் கைது
களக்காடு பகுதியில் சீட்டு விளையாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் பத்மநேரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து, சட்டவிரோதமாக சீட்டு விளையாடிக் கொண்டிருந்த சிவன்பாண்டி (வயது 32), வெங்கடேஷ் (48), மாரியப்பன் (54), நம்பிராஜன் (35), சுப்பிரமணியன் (52) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.