சூதாடிய 5 பேர் கைது

திருக்காட்டுப்பள்ளி அருகே சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-21 19:53 GMT

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் மற்றும் போலீசார் வரகூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வரகூர் காளியம்மன் கோவில் தெற்கு தெருவில் காசு வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பணம் வைத்து சூதாடிய வரகூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து, ராஜா, மவுலி, சிவக்குமார், கோவிந்தராஜ் ஆகிய 5 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்