சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது

சாணார்பட்டி அருகே, சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-24 16:37 GMT

சாணார்பட்டி அருகே உள்ள புங்கம்பாடியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடத்துவதாக சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது புங்கம்பாடி காட்டுப்பகுதியில் 10 பேர் கும்பல் சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அதில், 5 பேர் சிக்கினர். மேலும் 5 பேர், சேவல்களுடன் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து பிடிபட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் புங்கம்பாடியை சேர்ந்த சங்கிலி (வயது 37), ஆனந்தகுமார் (24), பிரபு (31), தருமத்துப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (43), மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த சக்திவேல் (42) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 மோட்டார் சைக்கிள்கள், ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்