சின்னசேலத்தில் வருவாய்த்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த 5 பேர் கைது
சின்னசேலத்தில் வருவாய்த்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி வள்ளி என்பவருக்கு சொந்தமாக சின்னசேலம் தெற்கு வருவாய் கிராம எல்லையில் உள்ள விவசாய நிலத்தை சின்னசேலம் தாசில்தார் இந்திரா உத்தரவுப்படி சின்னசேலம் கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ், சின்னசேலம் குறுவட்ட நில அளவையர் பாஸ்கர் ஆகியோர் நேற்று அளவீடு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சின்னசேலத்தை சேர்ந்த தங்கவேல் மனைவி தனலட்சுமி (62), அவரது மகன்கள் ராமமூர்த்தி (40), சிவா (32), குருமூர்த்தி (26) மற்றும் வி.மாமந்தூர் தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோவன் (56) ஆகியோர் வருவாய்த்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து அசிங்கமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு வழக்குப்பதிந்து, தனலட்சுமி உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.