5 பேர் கைது
முத்துராமலிங்க தேவர் உருவப்படத்தை சேதப்படுத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேட்டை:
நெல்லை பேட்டையை அடுத்த திருப்பணிகரிசல்குளம் பஸ் நிறுத்தம் அருகே தேவர் பீடத்தில் சம்பவத்தன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர், பூலித்தேவன் ஆகியோர் உருவப்படங்களை மர்மநபர்கள் சேதப்படுத்தி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த நம்பிராஜ் (வயது 30), முருகேசன் (22), பேச்சிமுத்து (23), மாரிசங்கர் (20) உள்பட 5 பேரை கைது செய்தனர்.