5 விவசாயிகளுக்கு புதிய இலவச மின்மாற்றி

5 விவசாயிகளுக்கு புதிய இலவச மின்மாற்றியை எம்.எல்.ஏ. மாணிக்கம் இயக்கி வைத்தார்.

Update: 2023-05-23 19:02 GMT

குளித்தலை ஊராட்சி ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பள்ளி, கருங்களாப்பள்ளி பகுதியில் மின்சார வாரியம் மூலம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 5 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பிற்காக மின் மாற்றி அமைத்து, அவர்களின் பயன்பாட்டிற்கு கொடுத்தல் மற்றும் சூரியனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சூரியனூர், கவுண்டம்பட்டி பகுதிகளில் ரூ.18 லட்சத்தில் 300 மின் நுகர்வோர் பயன்படும் வகையில் அதிக மின் திறன் கொண்ட புதிய மின்மாற்றி இயக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குளித்தலை எம்.எல்.ஏ. இரா.மாணிக்கம் தலைமை தாங்கி புதிய மின் மாற்றிகள் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், குளித்தலை மின்சார வாரிய செயற்பொறியாளர் பொறுப்பு ஆனந்த், உதவி செயற்பொறியாளர் பாலகுமார் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள், அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்