கணவர் இறந்த 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
கணவர் இறந்த 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே உள்ள மதகுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா(வயது 30). இவருடைய மனைவி பொன்னழகு(25). இவர்களுக்கு 2½ வயதில் ஒரு பெண் குழந்தையும், 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. கடந்த மார்ச் மாதம் ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பொன்னழகு மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பொன்னழகு நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.