சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.2½ லட்சத்தில் 5 எல்.இ.டி. டி.வி.கள்
சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.2½ லட்சத்தில் 5 எல்.இ.டி. டி.வி.கள் வழங்கப்பட்டது.
திமிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களிடையே சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் இயங்கி வரும் மணிமார்க் கடலை மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தினர் தங்கள் சமூக பங்களிப்பு நிதி ரூ.2½ லட்சம் மதிப்பீட்டில் 5 எல்.இ.டி. டி.வி.களை கலெக்டர் வளர்மதி முன்னிலையில், பொது சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட தொழில் மைய மேலாளர் ஆனந்தன், சுகாதாரபணிகள் துணை இயக்குனர் மணிமாறன், ஆற்காடு மணி மார்க் கடலை மிட்டாய் நிறுவன மேலாளர் ஷாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.