டிரைவர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை- பணம் திருட்டு

திருப்பத்தூரில் டிரைவர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

Update: 2022-12-19 17:53 GMT

திருப்பத்தூரில் டிரைவர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

டிரைவர்

திருப்பத்தூர் ெரயில் நிலையம் அருகே உள்ள சாமநகரை சேர்ந்தவர் வேலு (வயது 47), டிராவல்ஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் அய்யப்ப பக்தர்களை ஏற்றிக்கொண்டு சபரிமலை சென்றுள்ளார். அவரது மனைவி பூங்கொடி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று இரவு அங்கேயே தங்கியுள்ளார்.

பின்னர், நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது மூன்று பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.

நகை- பணம்திருட்டு

பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை. மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து பூங்கொடி திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருட்டுப்போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்