வனத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறிவிவசாயியிடம் ரூ.5 லட்சம் மோசடி

வனத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

Update: 2023-09-09 18:45 GMT


சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவக்குமார் (வயது 42). விவசாயி. இவருக்கு வனத்துறையில் வேலை வாங்கி தருவதாக திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை சேர்ந்த குணசேகரன் மகன் சக்தி (வயது 38) என்பவர் கூறியுள்ளார். இதற்காக கடந்த மே மாதம் ரூ.5 லட்சத்தை சிவக்குமாரிடம் இருந்து பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு உரிய வேலையை வாங்கி கொடுக்கவில்லை. இதையடுத்து சக்தியிடம் சென்று சிவக்குமார் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த சக்தி ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து சங்கராபுரம் போலீசில் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், சக்தி மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags:    

மேலும் செய்திகள்