ெரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்

ராணிப்பேட்டையில் ெரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-08-02 19:01 GMT

ெரயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் அவ்வப்போது ெரயில் நிலையங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூரில் உள்ள வாலாஜா ரோடு ெரயில் நிலையத்தில் ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

வாலாஜா ரோடு வழியாக ஒடிசாவிலிருந்து திருப்பூர் நோக்கி சென்ற ெரயிலில் ஏறி சோதனை செய்த போது 5 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அப்போது ெரயிலில் இருந்து தப்பியோட முயன்ற வாலிபரை பிடித்து ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த சுஜித்நாயக் (வயது 24) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்