கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
கோட்டூர் அருகே கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோட்டூர் அருகே கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் கவிழ்ந்தது
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே ஆலத்தூர் மற்றும் திருக்கொள்ளிக்காட்டை சேர்ந்தவர்கள் கமாலுதீன் (வயது81), சையது ஹோரன் (60), பாத்திமா பீவி (86), ரசூல் பீவி (65), ஜஹாங்கிர் (50). இவர்கள் தஞ்சையில் உறவினர் வீட்டில் நடந்த திருமணத்திற்கு காரில் சென்றுள்ளனர். காரை ஜஹாங்கிர் ஓட்டினார்.
அங்கிருந்து ஊருக்கு திரும்பி வரும்போது கோட்டூர் அருகே இரட்டைப்புலி என்ற இடத்தில் கார் எதிர்பாராதவிதமாக வயலுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
5 பேர் படுகாயம்
இதில் காரில் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் பாத்திமாபீவி, கமாலுதீன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.