அரை ஆண்டு சொத்துவரி செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்

அரை ஆண்டு சொத்துவரி செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம்என்று நகராட்சி ஆணையர் ஹேமலதா தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-20 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி பகுதியில் வருகிற 30-ந் தேதிக்குள் அரை ஆண்டு சொத்து வரியை செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம் என்று நகராட்சி ஆணையர் ஹேமலதா தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேதாரண்யம் நகராட்சிக்கு எல்லைக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது 2023-24-ம் ஆண்டின் முதல் அரை ஆண்டுக்கான சொத்து வரியினை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தி, சொத்து உரிமையாளர்கள் 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம். சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை தங்களது இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்களிடமோ அல்லது காசோலை, வரைவோலை மற்றும் இணையதளம் வாயிலாகவோ செலுத்தலாம். இதன் மூலம் நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்