சிப்காட் அருகே லாரி மோதி 5 மின்கம்பங்கள் சாய்ந்தன
சிப்காட் அருகே லாரி மோதி 5 மின்கம்பங்கள் சாய்ந்தன.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகே புளியந்தாங்கல் வழியாக சென்ற கன்டெய்னர் லாரி திடீரென பழுதானதால் சாலையோரம் நிறுத்தப்பட்டது. அதில் உள்ள கோளாைற டிரைவரால் சரி செய்ய முடியவில்லை.இதனையடுத்து அதனை இழுத்துச் செல்ல வேலூரில் இருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. கன்டெய்னர் லாரியின் பின்னால் அந்த வாகனம் பொருத்தப்பட்டு பின்னோக்கி இழுத்து சென்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின்கம்பிகளில் அந்த வாகனம் சிக்கி சாலையோரம் நிறுவப்பட்டிருந்த 5 மின் கம்பங்கள் மீது உரசியதால் அந்த கம்பங்கள் சரிந்தன. அந்த பகுதியில் இருந்தவர்கள் கூச்சலிடவே அந்த கன்டெய்னரை இழுத்து சென்ற வாகனம் அங்கேயே நிறுத்தப்பட்டது.
நல்லவேளையாக வேறு யாரும் அந்த இடத்தில் இல்லாதததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.