5-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

வள்ளலார் நினைவு தினத்தையொட்டி 5-ந்தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-02 18:45 GMT

திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வள்ளலார் நினைவு தினம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனால், அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்றுள்ள மது கூடங்கள், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சில்லறை விற்பனை மது கடைகள் அதனை சார்ந்த மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும். இதனை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் மதுபான பார்கள், ஓட்டல்களில் உள்ள பார்களில் மது விற்பனை செய்தால் மதுபான பார் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்கள் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, மதுகூட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்