நல வாரியத்திற்கு ரூ.5 கோடி நிரந்தர ஆதார நிதி
பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ.5 கோடி நிரந்தர ஆதார நிதி ஆலை உரிமையாளர்கள் வழங்கும் படி கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்திற்கு ரூ.5 கோடி நிரந்தர ஆதார நிதி ஆலை உரிமையாளர்கள் வழங்கும் படி கலெக்டர் மேகநாதரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.
தீப்பெட்டி தொழிற்சாலை
இதுகுறித்து அனைத்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசால் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியம் கடந்த 30.12.2020 அரசாணைப்படி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
நிரந்தர ஆதார நிதி
உரிமையாளர்கள் மேற்படி நல வாரியத்திற்கு நிரந்தர ஆதார நிதி வழங்க பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்ததின் அடிப்படையில் கலெக்டர் ரூ.5 கோடி நிரந்தர ஆதாரநிதி பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்களிடம் பெற்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே அனைத்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் நலவாரிய நிரந்தர ஆதார நிதிக்கு குறைந்த பட்சம் ரூ. 40ஆயிரம் வழங்குமாறு வேண்டுகிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.