5 பசுக்கள் மர்மச்சாவு

தீவனம் கலந்த நீரை குடித்த 5 பசுக்கள் மர்மமான முறையில் இறந்தன.

Update: 2022-11-17 17:03 GMT

வடமதுரை அருகே உள்ள தொட்டயகவுண்டனூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 43). விவசாயி. அவருடைய மனைவி வடிவுக்கரசி. பெரியசாமி தனது வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வந்தார். நேற்று மாலை வடிவுக்கரசி, மாடுகளுக்கு கால்நடை தீவனம் கலந்த நீரை தொட்டியில் குடிக்க வைத்துள்ளார். அப்போது அதை குடித்த சிறிது நேரத்தில் 5 மாடுகளும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து அசைவின்றி கிடந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வடமதுரை கால்நடை உதவி டாக்டர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று மாடுகளுக்கு சிகிச்சை அளித்தார். ஆனால் அதற்குள் 5 பசு மாடுகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன.

அதன்பின்னர் கால்நடை டாக்டர் நடத்திய சோதனையில் பசுக்கள் குடித்த தீவன நீரில் யூரியா கலந்திருப்பது தெரியவந்தது. மேலும் இறந்த மாடுகளின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த பின்னரே சாவிற்கான காரணம் தெரியவரும் என்று கால்நடை டாக்டர் தெரிவித்தார். தீவனத்தில் தவறுதலாக யூரியா கலந்ததால் மாடுகள் உயிரிழந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்