சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம்
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம்
பொள்ளாச்சி
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று 5 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மணமக்களுக்கு 4 கிராமில் தங்க தாலி, ரூ.50 ஆயிரம் மதிப்பில் கட்டில், மெத்தை, மிக்சி, குக்கர் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி, கோவில் செயல் அலுவலர்கள் சீனிவாச சம்பத், கந்தசாமி, தேவிபிரியா மற்றும் அதிகாரிகள், மணமக்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.