வெறிநாய்கள் கடித்து 5 சிறுவர்கள் படுகாயம்

வத்திராயிருப்பில் வெறி நாய்கள் கடித்து 5 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-11-10 18:45 GMT

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பில் வெறி நாய்கள் கடித்து 5 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

வெறிநாய்கள் கடித்தன

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சியில் தற்போது தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. மேலும் தெருக்களில் வெறி நாய்களும் சுற்றித்திரிகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வத்திராயிருப்பை சேர்ந்த விஸ்வ சங்கர் (வயது 8), விஸ்வபிரணித்(4), அகிலன் (3), ரிசி கரண்(12), கவிபாரதி (14) உள்பட 5 சிறுவர்ளை தெருக்களில் சுற்றித்திரிந்த வெறி நாய்கள் விரட்டி கடித்தன. பாதிக்கப்பட்ட சிறுவர்கள் 5 பேரும் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

3 பேர் பலத்த காயம்

உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் விஸ்வசங்கர், நாய் கடித்ததில் படுகாயம் அடைந்தான். இதை போல் விஸ்வபிரணித்துக்கு தலை மற்றும் நெஞ்சுப் பகுதியிலும், அகிலனுக்கு கையிலும் நாய் கடித்து காயம் ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் 3 சிறுவர்களும் பலத்த காயங்களுடன் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் ரிசிகரண், கவிபாரதி ஆகிய 2 சிறுவர்களுக்கு சிறிய காயம் என்பதால் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றனர். எனவே பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய்களை பிடித்து மேலும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்