மணல் கடத்தி வந்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

களம்பூர் அருகே மணல் கடத்தி வந்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-08 10:29 GMT

ஆரணி

களம்பூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காமக்கூர் ஆற்றுப்படுகை பகுதியில் களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 5 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும் நடுரோட்டிலேயே மாட்டு வண்டிகளை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து 5 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் மாட்டு வண்டியின் உரிமையாளர்கள் குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், விஜி, சதீஷ், சங்கர், ஹரி ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது.

அவர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்