செம்பனார்கோவிலில் 48 மி.மீ. மழை

செம்பனார்கோவிலில் 48 மி.மீ. மழை பெய்தது

Update: 2022-11-09 18:45 GMT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடற்கரையோர மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பகல் 12 மணி முதல் நேற்று அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செம்பனார்கோவிலில் 48 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- மயிலாடுதுறை-40, தரங்கம்பாடி-38, மணல்மேடு - 29, கொள்ளிடம்-25, சீர்காழி-24. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் மழை பெய்யவில்லை. இதமான வெயில் காணப்பட்டது. வயல்களில் தேங்கிய மழை நீர் படிப்படியாக வடிய தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்