முககவசம் அணியாத 48 பேருக்கு அபராதம்

பரப்பாடியில் முககவசம் அணியாத 48 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-06-29 18:50 GMT

இட்டமொழி:

நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜான் ஜெயச்சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று பரப்பாடி காமராஜர் சிலை அருகே மெயின் ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, முககவசம் அணியாத 48 பேருக்கு அபராதம் விதித்தனர். மேலும் அதே இடத்தில் சுகாதார பணியாளர்களைக் கொண்டு 55 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு முககவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்