இந்து முன்னணியினர் 47 பேர் கைது

இந்து முன்னணியினர் 47 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-07 19:24 GMT

சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் வீரபாண்டி, செயலாளர்கள் சக்திவேல், சேர்மன் பா.ஜ.க .மாவட்ட பொது செயலாளர் ஆத்மா கார்த்திக், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் காளீஸ், திருவருட்செல்வன் சிவக்குமார் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் 47 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்களை விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்