ஆரல்வாய்மொழி அருகே450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ஆரல்வாய்மொழி அருகே450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஆரல்வாய்மொழி அருகே தோவாளை ரெயில் நிலையம் உள்ளது. இரவு இந்த ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள சாலையோரத்தில் சில மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து சந்தேகமடைந்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த மூடைகளை சோதனை செய்தனர். அப்போது, 13 மூடைகளில் மொத்தம் 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்துவதற்காக அங்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கோணத்தில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது.