450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்த முயன்ற 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கொல்லங்கோடு:
கேரளாவுக்கு கடத்த முயன்ற 450 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கொல்லங்கோடு போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு சஜிகுமாய் கல்லடிதோப்பு பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட ஆட்டோ ஒன்று வந்தது. சந்தேகமடைந்த அவர் ஆட்டோவை நிறுத்தினார். உடனே ஆட்டோவை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து ஏட்டு சஜிகுமார் ஆட்டோவை சோதனை செய்தபோது அதில் 10 சாக்கு மூடைகளில் 450 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில் இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அரிசியை ஆட்டோவுடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து கிள்ளியூர் வட்ட வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
------------