அரசு முத்திரை இல்லாத 44 எடை கற்கள் பறிமுதல்

சேலத்தில் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அரசு முத்திரை இல்லாத 44 எடை கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-09-12 19:45 GMT

சேலம் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், உதவி ஆய்வாளர்கள் அன்பழகன், இளையராஜா, சுதா, ரமணி மற்றும் அதிகாரிகள் நேற்று பழைய பஸ் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழக்கடைகள், நடைப்பாதை கடைகள், மீன் கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது முத்திரை இல்லாத, மறுமுத்திரையிடப்படாத மற்றும் தரப்படுத்தப்படாத 11 மின்னணு தராசுகள், 4 மேஜை தராசுகள், 5 விட்ட தராசுகள் மற்றும் அரசு முத்திரை இல்லாமல், மறு முத்திரையிடப்படாத வணிகர்கள் பயன்படுத்திய 44 இரும்பு எடை கற்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

வணிகர்கள் தாங்கள் பயன்படுத்தி வரும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறு முத்திரையிடப்படாமல் இருந்தால் குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்