மதுவிலக்கு சோதனைச்சாவடி போலீசார் 44 பேர் இடமாற்றம்

மதுவிலக்கு சோதனைச்சாவடி போலீசார் 44 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

Update: 2023-06-26 18:45 GMT

விழுப்புரம்:

கிளியனூர் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வரவேற்பு பணிக்கும், கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியநாதன் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்திற்கும், பெரும்பாக்கம் சோதனைச்சாவடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமார் செஞ்சி போலீஸ் நிலையத்திற்கும், கோட்டக்குப்பம் சோதனைச்சாவடி ஏட்டு திருஞானசம்பந்தம் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும், அனிச்சங்குப்பம் சோதனைச்சாவடி ஏட்டு சிவஜோதி திண்டிவனம் போலீஸ் நிலையத்திற்கும், சிறுவந்தாடு சோதனைச்சாவடி ஏட்டு கோகுல்குமார் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கும், பட்டானூர் சோதனைச்சாவடி ஏட்டு வினோத் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கும் இவர்கள் உள்பட சோதனைச்சாவடி போலீசார் 44 பேர் மாவட்டத்திற்குள் வெவ்வேறு போலீஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பிறப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்